அன்வாரிடமிருந்து விளக்கம் பெற்றார் பேரரசர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 26-

பூடி மடானி ரோன் 95 எனும் மானிய விலை பெட்ரோல் உதவித் திட்டம் குறித்து மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று விளக்கமளித்தார்.

இஸ்தானா புக்கிட் துங்குவில் நடைபெற்ற இச்சந்திப்பில் மானிய விலை பெட்ரோல் விற்பனைத் திட்டம் சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய அரசாங்கம் கைக்கொள்ளவுள்ள முயற்சிகள் குறித்தும் அவர்களால் விவாதிக்கப்பட்டன.மலேசியர்களின் வாழ்க்கைச் செலவினத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகள் குறித்தும் பேரரசரிடம் அன்வார் எடுத்துரைத்தார். அத்துடன், கோலாலம்பூரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் ஏற்பாட்டுப் பணிகள் குறித்தும் சுல்தான் இப்ராஹிமுக்கு அவர் விளக்கினார்.

பூடி 95 எனும் மானிய விலை பெட்ரோல் விற்பனைத் திட்டம் வரும் 30ஆம் தேதி ஆரம்பமாகிறது. அத்திட்டத்தின்கீழ் மலேசிய குடிமக்களுக்கு ஒரு லிட்டர் ரோன் 95 பெட்ரோல் 1,99 வெள்ளிக்கு விற்கப்படும். அதன் தற்போதைய விலை 2.05 வெள்ளியாகும்.மைகாட் அடையாள அட்டை அல்லது வாகனமோட்டும் லைசென்ஸை காட்டி மாதமொன்றுக்கு அதிகபட்சம் 300 லிட்டர் பெட்ரோலை மலேசியர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *