நேற்று முதல் ஒரு வீடு ஒரு ஜாலுர் கெமிலாங் எனும் பிரச்சாரம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 16-

“மலேசியா மடானி; அரவணைக்கப்படும் மக்கள் என்ற கருப்பொருளைக் கொண்ட இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டங்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு வீடு ஒரு ஜாலுர் கெமிலாங் எனும் பிரச்சாரம் நேற்று முதல் சுகாதார அமைச்சின் பிரிவுகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் ஐந்து பிரிவுகளை மட்டுமே உள்ளடக்கியது என்றாலும் இவ்வாண்டு சுகாதாரத் துறையில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று தகவல் துறை தலைமை இயக்குநர் ஜுலினா ஜொஹான் தெரிவித்தார். "சுகாதாரக் குழுவிற்கான பிரச்சார தொடக்க விழா அண்மையில் அமைச்சு அளவில் நடைபெற்றது.

இதற்கு சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தலைமை தாங்கினார்.
மேலும் செராஸ் மறுவாழ்வு மருத்துவமனை எச்.ஆர்.சி பிரச்சாரத்திற்கான தொடக்க இடமாக அமைந்தது." என்றார் அவர்.மேலும், கோம்பாக் பழங்குடியினர் மருத்துவமனை மற்றும் கோலாலம்பூர் சுகாதார சிகிச்சையகங்களிலும் இப்பிரச்சாரம் தொடரப்படும் என்று ஜூலினா கூறினார்.

ஜாலுர் கெமிலாங்கை பறக்கவிடுவதற்கான முயற்சிகள் அரசாங்க வளாகங்களில் மட்டும் மேற்கொள்ளப்படாமல் வணிக வளாகங்கள், தனியார் வீடுகள், உள்ளூர் சமூகப் பகுதிகளிலும் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *