சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி உண்மையில்லை - நூருல் இஸா!
- Muthu Kumar
- 31 Mar, 2026
பெட்டாலிங் ஜெயா மார்ச் 31:
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வர், தான் பதவியிலிருந்து விலகிவிட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை மறுத்துள்ளார்.அது முற்றிலும் உண்மையல்ல என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிகேஆர் தலைவர் அன்வர் இப்ராஹிமின் மகளான நூருல் இஸ்ஸா, தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாகக் கூறினார்.தற்போதைய தலைமையில் எந்த மாற்றமும் இல்லை, கட்சியின் செயல்திட்டத்தை வலுப்படுத்துவதே இப்போது தனது முக்கிய நோக்கம் என்று அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் காட்டப்படும் அக்கறையைப் பாராட்டுவதாகவும், ஆனால் பொதுமக்கள் போலியான தகவல்களாலோ அல்லது தீய நோக்கமுள்ள யூகங்களாலோ பாதிக்கப்படக்கூடாது என்றும், மாறாக கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



