2027-ஆம் ஆண்டின் கல்வி அமர்வுக்கு அதிகரித்துள்ள 6 வயது குழந்தைகள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 4: 2027 ஆம் ஆண்டு பள்ளி அமர்வில் ஆறு வயது குழந்தைகள் 1 ஆம் வகுப்பில் சேர கல்வி அமைச்சு 3,50,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் 700,000 விண்ணப்பங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இவை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, 2027 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு 351,789 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தயார்நிலை மற்றும் அமைப்பின் நோக்கம் மீதான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *