பூர்வகுடி மக்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 12% அதிகரிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 15-

நாட்டில் பூர்வகுடி மக்கள் தொகை எண்ணிக்கை தற்போது 2 லட்சத்து 27 ஆயிரத்து 900ஆக பதிவாகி இருக்கிறது. இவர்களின் எண்ணிக்கை சராசரி ஓராண்டுக்கு 12 விழுக்காடு அதிகரித்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 461ஆக இருந்தது.

பூர்வகுடி மக்களின் பாரம்பரிய வசிப்பிடங்களில் பகாங் மற்றும் பேராக்கில்தான் அவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதாக, பூர்வகுடி மக்கள் தொகை விவரங்கள் மீதான ஒரு சிறப்பு அறிக்கையில் புள்ளிவிவர இலாகா குறிப்பிட்டுள்ளது.

பகாங்கில் கடந்த 2020ஆம் ஆண்டில் 82,824 பூர்வகுடியினரும் அதைத் தொடர்ந்து பேராக்கில் 58,942 பூர்வகுடியினரும் சிலாங்கூரில் 21,312 பூர்வகுடியினரும் பெரிய எண்ணிக்கையில் இருக்கின்றனர். மாவட்ட வாரியாகப் பார்த்தால், பேராக்கின் பத்தாங் பாடாங்கில் மட்டும் 17,092 பேரும் பகாங்கின் லிப்பிஸில் 14,999 பேரும் ரொம்பினில் 14,985 பேரும் பெரிய எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *