வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 518,700 ஆக குறைந்துள்ளது!
- Muthu Kumar
- 12 Aug, 2025
கோலாலம்பூர்,ஆக. 12-
இவ்வாண்டு ஜூன் மாதத்திற்கான நாட்டின் வேலையின்மை விகிதம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக 3.0 விழுக்காடாக பதிவு செய்திருக்கும் நிலையில். வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 518,700 ஆக குறைந்துள்ளது என்று மலேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் நேர்மறையான வளர்ச்சிக்கு ஏற்ப இவ்வாண்டு ஜூன் மாதத்தில் தொழிலாளர் சந்தைக்கான அடைவுநிலை தொடர்ந்து ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக, மலேசிய புள்ளிவிவரத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முஹமட் உசிர் மஹிடின் கூறினார்.
ஒவ்வொரு மாதமும் 0.3 விழுக்காடு அதிகரித்து இவ்வாண்டு ஜூன் மாதம் அதன் எண்ணிக்கை 1 கோடியே 74 லட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்களாக பதிவாகி உள்ளதை டத்தோஸ்ரீ டாக்டர் முஹமட் உசிர் சுட்டிக்காட்டினார்.
ஜூன் மாதத்தில் கே.பி.தி.பி எனப்படும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மே மாதத்தில் பதிவு செய்யப்பட்டதைப் 6 70.8 விழுக்காடாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார் அதோடு, அதே மாதத்தில் வேலைவாய்ப்புகள் 0.3 விழுக்காடு அதிகரித்து, 1 கோடியே 69 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதையும் அந்த அறிக்கை காட்டுகிறது.ஜூன் மாதத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 0.7 விழுக்காடு குறைந்து 518,700 தொழிலாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



