ரஃபிஸியின் மனைவிக்கு மிரட்டல் செய்தி அனுப்பிய எண் வெளிநாட்டவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 22: பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ரம்லியின் மனைவிக்கு மிரட்டல் குறுஞ்செய்திகளை அனுப்பப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் வெளிநாட்டவர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறைத் தலைவர் காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.

இன்னும் அந்த நபரையும் அவரது நாட்டையும் கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக என்று இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

கடந்த வாரம், தங்கள் மகன் இரண்டு ஆண்களால் சிரிஞ்சால் தாக்கப்பட்ட மறுநாளே தனது மனைவிக்கு இரண்டு மிரட்டல் குறுஞ்செய்தி வந்ததாக ரஃபிஸி கூறினார்.

அவரின் கூற்றுப்படி, அவரது மனைவிக்கு தெரியாத எண்ணிலிருந்து "அமைதியாக இரு. நீங்கள் தொடர்ந்தால், எய்ட்ஸ்" என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது என்று தெரிவித்திருந்தார்.

பல மணி நேரம் கழித்து, அதே குறுஞ்செய்தியையும், அதைத் தொடர்ந்து மூன்று சிரிஞ்ச் எமோஜிகளையும் அவரது மனைவி பெற்றார்.

ஆகஸ்ட் 13 அன்று, புத்ராஜெயாவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் ரஃபிஸியின் 12 வயது மகன் பிற்பகல் 2 மணியளவில் தாக்கப்பட்டார்.

இழுத்துச் செல்லப்பட்டு, சிரிஞ்சால் குத்தப்பட்ட அவரது மகன், சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில்  அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களது ஓட்டுநரின் வாக்குமூலங்கள் உட்பட இதுவரை 19 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காலிட் கூறினார்.

தாக்குதலைத் தொடர்ந்து சமூக ஊடகப் பதிவுகளில் ரஃபிஸி அடையாளம் கண்ட நபர்கள் குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டபோது, ​​காலிட் கருத்து தெரிவிக்க முடியாது என்றும், இது தனது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *