மலேசிய கால்பந்து சங்கத்திற்கு மேலும் 7 மில்லியன் ரிங்கிட் நிதி தேவை!
- Muthu Kumar
- 21 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 21-
மலேசிய கால்பந்து சங்கத்தின் சந்தைப்படுத்தல், நிதியுதவி குழு. தங்களது இலக்கை அடைய மேலும் 7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதியுதவி தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.
மலேசிய கால்பந்து சங்கத்தின் சந்தைப்படுத்தல், நிதியுதவி குழுவின் தலைவரும், அதன் நிர்வாகக் குழு உறுப்பினருமான டத்தோ முகமட் ஹிசாமுடின் யாஹ்யா, அனைத்து தேசிய அணிகளின் நிர்வாகச் செலவுகளையும் ஈடுகட்ட ஆண்டுக்கு 15 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக விளக்கினார்.
இந்த ஆண்டு, இதுவரை 7 முதல் 8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிதியுதவியை பல நிதியுதவியாளர்களிடமிருந்து பெறுவதற்கு குழு வெற்றி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், மீதமுள்ள 7 மில்லியன் ரிங்கிட் இலக்கை அடைய, திட்டமிட்டபடி அனைத்து நடவடிக்கைகளும் சீராக நடைபெற்றால், 15 மில்லியன் ரிங்கிட் இலக்கை எட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசிய கால்பந்து சங்கம். தேசிய அணிகளின் வளர்ச்சி, நிர்வாகத்திற்கு இந்த நிதியைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிதியுதவி, அணிகளின் பயிற்சி, பயணம்,பிற நிர்வாகச் செலவுகளுக்கு முக்கியமானதாக உள்ளது.டத்தோ முகமட் ஹிசாமுடின், நிதியுதவியாளர்கள் உடனான ஒத்துழைப்பு, தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என உறுதியாக நம்புகிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



