உயர்மட்ட நீதிபதிகள் நியமனம் குறித்து ஆட்சியாளர்கள் மன்றம் இன்று முக்கிய அறிவிப்பை செய்யும்- அன்வார்!
- Muthu Kumar
- 16 Jul, 2025
புத்ராஜெயா, ஜூலை 16-
இன்னும் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் நாட்டின் உயர் நீதித்துறை பதவிகள் தொடர்பான தவறான கருத்துகளுக்கு முடிவு கட்டுவதற்காக, ஆட்சியாளர்கள் மன்றம் இன்று புதன்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட விருப்பதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலையில் ஆட்சியாளர்கள் மன்றத்துடன் நடத்தப்பட்ட ஒரு நீண்ட நேர சந்திப்பைத் தொடர்ந்து இன்று இந்த அறிவிப்பு செய்யப்பட விருப்பதாகவும் அன்வார் கூறியுள்ளார்.
"நேற்று காலையில் நான் ஆட்சியாளர்கள் மன்றத்துடன் நீண்ட நேரம் கலந்து பேசினேன். இந்த விவகாரம் குறித்து அவர்களே முடிவு செய்ய விட்டு விடுவோம். இந்த விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள அனைத்து எதிர்மறையான எண்ணங்களையும் நிராகரிக்கக் கூடிய ஓர் அறிவிப்பு இன்று (புதன்கிழமை) செய்யப்படக் கூடும்.
“அந்த அறிவிப்பு செய்யப்படும்போது, நடப்பு மடானி அரசாங்கம், நீதித் துறையின் சுதந்திர கொள்கை உட்பட உண்மையாகவே சீர்திருத்தத்தில் ஈடுபட்டுள்ளது என்பது நிரூபிக்கப்படும்" என்று, புத்ராஜெயாவில் அன்வார் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



