பாஸ் கட்சி பிரதமர் பதவியில் மூழ்கியிருக்கவில்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 10: அடுத்த பொதுத் தேர்தலுக்கான (GE16) பிரதமர் வேட்பாளராக யாரையும் பெயரிட பாஸ் அவசரப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

இருப்பினும் அதன் பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணிக் கட்சியான பெர்சாத்து, ஏற்கனவே அதன் கட்சித் தலைவர் முகிதீன் யாசினை பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில்,பாஸின் முன்னுரிமை, அடுத்த நாடு தழுவிய தேர்தலில் பெருக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்று கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் திறனை உறுதி செய்வதாகும் என்று பாஸ் கட்சியின் உதவித் தலைவர் இட்ரிஸ் அகமது கூறினார்.

பாஸ் கட்சி பிரதமர் பதவியில் மூழ்கி இருக்கவில்லை. கட்சியில், பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவது குறித்து நாங்கள் ஒருபோதும் விவாதித்ததில்லை என்று அவர் விளக்கினார்.

கட்சியை வலுப்படுத்துவதிலும், தேர்தல்களில் வெற்றி பெறுவதை உறுதி செய்வதிலும், அரசாங்கத்தை அமைப்பதற்கான எண்ணத்தையே  கொண்டிருப்பதாகவும், அதில்தான் கவனம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *