பிபாவின் நடவடிக்கைகளுக்கு பின்னால் மலேசியாவை எதிர்க்க பெரிய திட்டங்கள் உள்ளன!
- Muthu Kumar
- 29 Sep, 2025
ஜொகூர்பாரு, செப். 29-
பிபாவின் நடவடிக்கைகளுக்கு பின்னால் மலேசியாவை எதிர்க்க பெரிய திட்டங்கள் உள்ளது என ஜொகூர் மாநில இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் தெரிவித்தார்.மலேசிய கால்பந்து சங்கம், மலேசிய ரத்த உறவுகள் கொண்ட ஏழு வீரர்களுக்கு எதிராக அனைத்துலக கால்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து மலேசியாவிற்கு எதிராக ஒரு பெரிய திட்டம் இருப்பதாக கூறிய அவர்,முன்னாள் எப்ஏஎம் துணைத் தலைவர் கைரி ஜமாலுடின் முன்பு பகிர்ந்து கொண்ட கூட்டரசு அரசியலமைப்பு சட்டம் பிரிவு 19 இன் கீழ் உள்ள சட்ட விதிகளின் அடிப்படையில் குடியுரிமை பிரச்சினைக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோனின் அறிக்கையையும் அவர் சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்து கொண்டார்.
ஏழு வீரர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான செயல்முறை நமது அரசியலமைப்பு, சட்டங்கள், கவனமாக பரிசீலிக்கப்பட்டதன் அடிப்படையில் அமைந்தது என்று உள்துறை அமைச்சர் தெளிவாகக் கூறியுள்ளார்.நாம் எப்போதும் மேல்முறையீட்டு செயல்முறையை ஆதரிக்க வேண்டும்.
மேலும் நமது தேசிய அணியின் பின்னால் ஒன்றுபட வேண்டும். கருத்து வேறுபாடு பிரிவினையை விதைக்கக்கூடாது. மலேசியாவிற்கு எதிராக இங்கே ஒரு பெரிய திட்டம் உள்ளது. நான் அதை உறுதியாக நம்புகிறேன் என்று துங்கு இஸ்மாயில் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



