எனக்கு தேசிய விருது கிடைக்க காரணமே இசைஞானி இளையராஜா தான்-அப்புக்குட்டி!
- Muthu Kumar
- 16 Sep, 2025
தமிழ் சினிமாவில் இசை சக்ரவர்த்தியாக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. 1976ம் ஆண்டில் அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், கடந்த 49 ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.1300க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி லண்டனில் 80க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த இசைக்கலைஞர்களை வைத்து வேலியண்ட் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றம் செய்தார். இப்போது இளையராஜாவுக்கு தமிழக அரசு அவரது வெற்றிக்கரமான இசை பயணத்தை பாராட்டி விழா நடத்தியிருக்கிறது. கடந்த 13ம் தேதி மாலை இந்த பாராட்டு விழா நடந்தது.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் அழகர்சாமியின் குதிரை என்ற படத்தில் பிரதான கேரக்டரில் நடித்தவர் அப்புகுட்டி. இந்த படத்தில் நடித்ததற்காக மத்திய அரசின் சிறந்த துணை நடிகர் தேசிய விருது நடிகர் அப்புகுட்டிக்கு கிடைத்தது. இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் அப்புகுட்டி கூறியதாவது, அழகர்சாமியின் குதிரை படத்தில் குதிக்கிற குதிக்கிற குதிரை குட்டி என் மனச காட்டுதே என்ற பாடலை இளையராஜா இசையமைத்து பாடியது எனது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை. அந்த பாடலுக்கு நான் திரையில் நடித்தது எனது நடிப்புக்கு பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது.
இந்த படத்தில் இடம்பெற்ற எமோஷன் காட்சிகள் பின்னணி இசை தேசிய விருது பெற முக்கிய காரணம். டெல்லி வரை கேட்டு அந்த இசையின் தாக்கத்தால் தான் என் நடிப்பு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டது. எனது தேசிய விருதுக்கு இளையராஜாதான் காரணம். என்னுடைய கனவு அவர் மூலம் நிறைவேறியது. ஒவ்வொரு கலைஞனின் கனவிலும் இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.
அந்த கனவு நிறைவேறியதோடு தேசிய விருதும் கிடைத்தது எனக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். கலைஞர்களுக்கு பல விருதுகள் கிடைப்பது சாதாரணம். ஆனால் ஒரு அரசாங்கம் சார்பில் அவர் அவருக்கு விழா நடத்துவது என்பது மிகப்பெரிய மரியாதை. அந்த அளவிலான பெருமையை இளையராஜாவுக்கு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி என்று நடிகர் அப்புக்குட்டி கூறியிருக்கிறார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



