ஜூன் மாதம் வரை இருப்பு இருக்கிறது! - ஆனாலும்... - பெட்ரோனாஸ் அறிவுறுத்து
- Shan Siva
- 15 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 15: நாடு முழுவதும் உள்ள தனது எரிபொருள் நிலையங்களில் ஜூன் இறுதி வரை எரிபொருள் விநியோகம் பாதுகாப்பாக இருக்கும் என்று பெட்ரோனாஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இது, முன்னர் கணிக்கப்பட்டிருந்ததை விட ஒரு மாதம் கூடுதலாகும் என்று தெரிவித்துள்ளது.
நாட்டின் எரிபொருள் தேவைகளில் சுமார் 50%-ஐ, தனது பொதுப் பங்கு துணை நிறுவனமான பெட்ரோனாஸ் டகங்கன் பிஎச்டி (Petronas Dagangan Bhd) மூலமாகவும், மீதமுள்ளவற்றை மலேசியாவில் செயல்படும் பிற எண்ணெய் நிறுவனங்கள் மூலமாகவும் பூர்த்தி செய்வதாக அந்த தேசிய எண்ணெய் நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், தனது எரிபொருள் நிலைய வலையமைப்பு முழுவதும் போதுமான இருப்பு இருப்பதை உறுதி செய்வதற்காக, தனது விநியோகச் சங்கிலியைத் தொடர்ந்து தீவிரமாக நிர்வகிக்கும் என்றும் அது கூறியது.
பொதுமக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ப பொறுப்புடன் எரிபொருளை வாங்கவும், பதுக்கி வைப்பதையோ அல்லது பீதியுடன் வாங்குவதையோ தவிர்க்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பொறுப்பான பயன்பாடு அனைவருக்கும் தொடர்ச்சியான எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய உதவும் என்று பெட்ரோனாஸ் வலியுறுத்தியது.
மலேசியா ஒரு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இருந்தாலும், ஈரானில் நடக்கும் போரின் தாக்கம் மலேசியாவிலும் ஏற்பட்டுளாதாகவும், நாட்டின் கச்சா எண்ணெய் தேவைகளில் கிட்டத்தட்ட 40% ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது என்றும் பெட்ரோனாஸ் கூறியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



