ஜெல்லி மீன் கடிக்கு இப்போதைக்கு மருந்தில்லை! - கெடா

top-news
FREE WEBSITE AD

அலோர் ஸ்டார், நவ 22: லங்காவி கடற்கரையில் நிகழ்ந்த அண்மைய துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, லங்காவியில் உள்ள சுல்தானா மலிஹா மருத்துவமனையில் ஜெல்லிமீன் கடித்தால் அதிலிருந்து பாதுகாப்பதற்கான மருந்து கிடைக்கும் வகையில் உறுதிசெய்யப்படும் என்று கெடா அரசு தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி பந்தாய் செனாங்கில் குளித்துக்கொண்டிருந்தபோது  ஜெல்லிமீன் கொட்டியதில் இரண்டு வயது ரஷ்ய குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்நிலையில் தற்போதைய சூழலில் மாநிலத்தில் எந்த மாற்று மருந்தும் இல்லை என்பதை கெடா சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் தொழில்முனைவோர் குழுவின் தலைவர் டத்தோ முகமட் சல்லே சைடின உறுதிப்படுத்தினார்.

ஆனால், சபா உட்பட பல இடங்களில் இந்த மாற்று மருந்து கிடைக்கிறது என்று முகமட் சல்லே குறிப்பிட்டார்.

இந்த விஷயத்தை அவசர பரிசீலனைக்காக சுகாதார அமைச்சகத்திற்கு கொண்டு செல்வதாக அவர் உறுதியளித்தார்.

ஜெல்லிமீன் தாக்குதலுக்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு சிறுவன் விளாடிமிர் யகுபனெட்ஸ் சுல்தானா பஹியா மருத்துவமனையில் இறந்தான்.

முகமட் சல்லே குழந்தையின் பெற்றோரை மருத்துவமனையில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.

இதனை அடுத்து நவம்பர் 24 ஆம் தேதி கடற்கரை பாதுகாப்பு குறித்து குறிப்பாக விவாதிக்க தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒரு சந்திப்பை நடத்தவிருப்பதாக அவர் கூறினார்.

ஜெல்லிமீன் குறித்து கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்ள நிபுணர்களையும் ஈடுபடுத்துவோம் என்று அவர் மேலும் கூறினார்.

அனைத்து பார்வையாளர்களின் பாதுகாப்பும் மாநில அரசின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் லங்காவி தீவுக்கு வருகை தருகின்றனர். இது விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியமாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *