இன்சுலின் போதுமான அளவு உள்ளது! - சுகாதார அமைச்சு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 17: இன்சுலின் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விநியோகம் தற்போதைக்கு நிலையானதாகவும் போதுமானதாகவும் உள்ளது என்று மலேசியர்களுக்கு சுகாதார அமைச்சு  உறுதியளித்துள்ளது.

நாடு முழுவதும் மருந்து கையிருப்பு நிலையாக இருப்பதை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக சுகாதாரத் துறையின் துணை  இயக்குநர் (மருந்து சேவைகள்) டாக்டர் அசுவானா ராம்லி கூறினார்.

இன்சுலின் விநியோகம் குறித்து, பரந்த அளவிலான சிகிச்சைகள் மற்றும் மாற்று மருந்துகள் கிடைப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கான சிகிச்சை பாதிக்கப்படவில்லை என்று அசுவானா கூறினார்.

இன்சுலினுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் அனலாக் அல்லது மாத்திரை மருந்துகளுக்கு மாற முடியும் என்பதால், அவர்கள் தங்கள் சிகிச்சையைத் தொடரலாம் என்று அவர் கூறினார்.

அதனால்தான் மருந்துகளின் விநியோகம் நிலையாகவும் கட்டுப்பாட்டிலும் உள்ளது. விநியோகச் சங்கிலியில் சில தடங்கல்கள் ஏற்படலாம், ஆனால் நோயாளிகள் தேவையான எந்த வழியிலாவது சிகிச்சை பெறுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *