நெகிரி செம்பிலானில் தேர்தலுக்கான வாய்ப்பு குறைவு! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 28: நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிலவும் அரசியல் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், அங்கு மாநிலத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இருப்பினும், இது நெகிரி செம்பிலானின் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் அவர்களின் முடிவையும், மாநில சட்டமன்றத்தின் நடவடிக்கைகளையும் பொறுத்தது என்று பக்காத்தான் ஹரப்பான் தலைவரான அன்வார்  கூறினார்.

ஹுவாவே செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் மற்றும் புத்தாக்க மையத்தின் தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற ஹுவாவேவின் உயர் நிர்வாகத்துடனான சந்திப்பிற்குப் பிறகு அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னதாக, நெகிரி செம்பிலான் நிர்வாகம் தொடர்பான எந்தவொரு முன்னேற்றமும் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று அன்வார் கூறியிருந்தார்.

கூட்டாட்சி அளவில் பாரிசான் நேஷனலுக்கும் பாரிசான் நேஷனலுக்கும் இடையிலான உறவுகள் உட்பட இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, விரைவில் அன்வாரைச் சந்திக்கப் போவதாக பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியும் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *