செவ்வாய் : 8 ஏப்ரல், 2025
08 : 34 : 13 AM
முக்கிய செய்தி

பிரதமரின் பதவிக்காலம் 10 ஆண்டுகள்தான்! சட்டத் திருத்தம் வேண்டும்

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், மார்ச் 16: பிரதமரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக 10 ஆண்டுகள் அல்லது இரண்டு பதவிக்காலங்களாகக் கட்டுப்படுத்த கூட்டாட்சி அரசியலமைப்பைத் திருத்துவதற்கான டிஏபியின் அழைப்புக்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தனது கட்சியான பிகேஆரும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியும் அத்தகைய திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறிய அன்வார், ஆனால் இந்த விஷயத்தில் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்த திட்டத்துடன் தாம் உடன்படுவதாகவும், ஆனால் ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு அனைத்துக் கட்சிகளிடமிருந்தும்  பேச்சுவார்த்தை நடத்தி ஆதரவைப் பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

கவலைப்படாதீர்கள்... நானாக இருந்தால், நான் 10 ஆண்டுகள் கூட நீடிக்க மாட்டேன். இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகிறது, நான் ஏற்கனவே சோர்வடைந்துவிட்டேன்  என்று பிகேஆர் தலைவருமான அன்வார், இன்று டிஏபியின் 18வது தேசிய மாநாட்டில் தனது உரையின் போது நகைச்சுவையாகக் கூறினார்.

தேவையான வாக்குகளைப் பெறாமல் அத்தகைய திருத்தத்தை அவசரப்படுத்துவதையும் அவர் எச்சரித்தார், போதுமான ஆதரவு இல்லாமல் ஒரு மசோதாவைத் தாக்கல் செய்வது பயனற்றது என்று கூறினார்.

பிரதமர் பதவிக்கு இரண்டு தவணை மட்டுமேயான பதவிக்கால வரம்பை அமல்படுத்துவதை உள்ளடக்கிய கூட்டாட்சி அரசியலமைப்பை அரசாங்கம் திருத்த வேண்டும் என்று கட்சி விரும்புவதாக முன்னதாக டிஏபி பொதுச் செயலாளர் அதோணி லோக் தனது உரையில் கூறினார்.

Perdana Menteri Anwar Ibrahim menyokong cadangan DAP untuk menghadkan tempoh jawatan Perdana Menteri kepada maksimum 10 tahun atau dua penggal. Beliau menekankan keperluan rundingan dengan parti lain sebelum membuat pindaan Perlembagaan, sambil bergurau bahawa beliau sudah pun berasa penat selepas dua tahun berkhidmat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *