மலையாள சினிமாவில் இன்னும் ஹீரோ வழிபாடு நீடிக்கிறது – பார்வதி திருவோத்து விமர்சனம்
- Surendran Sumdraraj
- 07 Jul, 2026
சென்னை, ஜூலை 7 –
மலையாள திரைப்படத் துறையில் இன்னும் 'ஹீரோ வழிபாடு' நீடித்து வருவதாக நடிகை பார்வதி திருவோத்து விமர்சித்துள்ளார்.
தனது புதிய திரைப்படமான 'I, Nobody' வெளியீட்டை முன்னிட்டு அளித்த பேட்டியில் அவர், இந்திய சினிமாவில் பெண்கள் கதாபாத்திரங்கள் இன்னும் ஒரே மாதிரியான வடிவத்தில் சித்தரிக்கப்படுகின்றன என்றும், கதாநாயகர்களை மையமாகக் கொண்ட கலாச்சாரம் மலையாள சினிமாவிலும் முழுமையாக மாறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
“பெண்கள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தவர்களாகவே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இன்னும் தொடர்கிறது. அவர்கள் இயல்பான குறைகளுடனும் உண்மையான மனிதர்களாகவும் சித்தரிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
திரைப்படத் துறையில் பெண்களுக்கு சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், கதைகளும் கதாபாத்திரங்களும் காலத்துக்கு ஏற்ற வகையில் மாற வேண்டிய அவசியம் இருப்பதாகவும் பார்வதி வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



