ஜிஎஸ்எப் தன்னார்வலர்கள் பாதுகாப்பாக திரும்பி வந்தது நாட்டின் ராஜதந்திர வெற்றிக்கான சான்று!
- Muthu Kumar
- 09 Oct, 2025
சிப்பாங், அக். 9-
ஜிஎஸ்எப் தன்னார்வலர்கள் பாதுகாப்பாக திரும்பி வந்தது நாட்டின் ராஜதந்திர வெற்றிக்கான சான்றாகும் என வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமது ஹசான் இதனை கூறினார். குளோபல் கமுத் ஃபுளோட்டிலா (ஜிஎஸ்எட்) மலேசிய தன்னார்வலர்கள் இஸ்ரேல் படையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
குறிப்பாக அவர்கள் அப்படையால் கைது செய்யப்பட்டு பல இன்னல்களை எதிர்நோக்கினர். இந்நிலையில் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர்.அவர்கள் நாடு திரும்பியது மலேசியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.மேலும் அனைத்துலக ஒற்றுமைக்கான வலுவான சான்றாகும் என்று அவர் கூறினார்.
அவர்களுடைய பாதுகாப்பிற்காக நாங்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்.துருக்கி, எகிப்து, ஜோர்டான் போன்ற நட்பு நாடுகளின் தலைவர்களுடன் மிக உயர்ந்த மட்டத்தில் அயராத ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்ட பிரதமருக்கு மனமார்ந்த நன்றி.
மேலும் தன்னார்வலர்கள் தங்கள் குடும்பங்களுக்குத் திரும்புவதற்கு வழிவகுத்த முயற்சிகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அவர் தனது பாராட்டுகளையும் தெரிவித்ததாக முஹமது ஹசான் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



