16ஆவது பொதுத் தேர்தலில் தேமு-பக்காத்தான் உடன்பாடு தொடரும் பிறகு நிலைமை மாறலாம்-அஹ்மாட் ஸாஹிட்.
- Muthu Kumar
- 25 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 25
அடுத்து நடைபெற விருக்கும் 16ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடனான தனது கூட்டணியைத் தொடர தேசிய முன்னணி திட்டமிட்டிருக்கிறது.
ஆனால், அதன் பிறகு, தேர்தலுக்கான தனது வியூகங்கள் மாறக் கூடும் என்று, தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கோடிகாட்டி இருக்கின்றார்.
வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுமாறு தேசிய முன்னணிக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டு வருவதை தாம் ஒப்புக் கொள்வதாகக் கூறிய அம்னோ தலைவருமான ஸாஹிட், ஆனால், பக்காத்தான் ஹராப்பானுடனான தனது கூட்டணியைத் தொடருவதென்பதில் தேசிய முன்னணி உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
எனினும், பின்பற்றப்பட்டு வரும் பொதுத் தேர்தலுக்கான தேசிய முன்னணியின் அரசியல் வியூகங்கள், கூட்டணியில் உள்ள பங்காளிக் கட்சிகளின் தேர்தல் செயல்பாட்டைத் தொடர்ந்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்."எங்களுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதும் அவற்றிலிருந்து பங்காளிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பதும் இப்போதைக்கு எங்களுக்குத் தெரியாது.
“மலேசியாவில், வழக்கமாக ஒவ்வொரு கட்சியும் வெவ்வேறு 'சமூகங்கள்" அதாவது இன அடிப்படையிலானவை என்பதுடன் அவை மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அரசியல் நிலைத்தன்மைக்காக எங்களின் இந்த வெவ்வேறு 'சமூகங்களை' மறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று ஸாஹிட் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர், 'தொங்கு நாடாளுமன்றம்' ஏற்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதில் அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி முக்கிய பங்கை ஆற்றியது.
அப்பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் 81 தொகுதிகளிலும் தேசிய முன்னணி 30 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. இதுவரை நடந்துள்ள பொதுத் தேர்தல்களில் அத்தேர்தலே மிகவும் மோசமான தேர்தலாகப் பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



