தம்பின் ஸ்ரீ வைத்தீஸ்வரர்‌ - தையல் நாயகி அம்மன் ஆலய விழா வெகு சிறப்பாக நடைபெற்றது!

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, ஜன 3: மலாக்கா தம்பின்‌ இரயில்வே ஸ்டேசனுக்கு அருகே‌ எழுந்தருளியுள்ள ஸ்ரீ வைத்தீஸ்வரர்‌ தையல் நாயகி அம்மன் ஆலயத்தில், இன்று திருவாதிரை திருவெம்பாவைத் திருவிழா‌ ஆருத்திரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்த பெருமக்கள் வருகை தந்து பூரண கிருபாகடாட்சத்தைப்‌ பெற்றுக்கொண்டனர். நிகழ்வில் ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன், மலாக்கா மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன் உட்பட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.  

 126 வருடங்கள் பழமையான இந்த ஆலயம். இரயில்வே ஊழியர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

 ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழா ஆரம்ப காலத்தில் தைப்பூச விழாவாகக் கொண்டாடப்பட்டது. காலப்போக்கில் இவ்விழா மார்கழி மாத விழாவாக அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றது.


 இவ்வாலயத்தின் தலைவர் ரமேஷ் செல்லையா தலைமையிலான நிர்வாகத்தினர் மிகச் சிறப்பான முறையில் விழாவின் ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்டனர்.

 பல்வேறு விதமான வாத்தியங்கள் முழங்க, பக்தப் பெருமக்கள் பக்தியில் திளைக்க, நேர்த்திக்கடனாய் பெரிய பெரிய காவடிகள் ஆடி வர  ஸ்ரீ வைத்தீஸ்வரர்‌ - தையல் நாயகி அம்மன் திருவாதிரை திருவெம்பாவைத் திருவிழா‌ ஆருத்திரா தரிசனம் பக்திப் பரவசத்தோடு சிறப்பாக நடைபெற்றது!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *