கிள்ளான் மேற்கு துறைமுகத்தில் RM 1 மில்லியன் மதிப்பிலான மென்று உபயோகிக்கும் புகையிலை பறிமுதல்!

- Shan Siva
- 27 Mar, 2025
சிரம்பான். மார்ச்
27: கிள்ளானின் வெஸ்ட்போர்ட்டில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் 10 லட்சம் வெள்ளி மதிப்புள்ள மென்று உபயோகிக்கும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மார்ச் 1 ஆம்
தேதி நடந்த ஒரு நடவடிக்கையின் போது கடத்தல் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநில
சுங்க இயக்குநர் முகமது இலியாஸ் குயீக் அப்துல்லா தெரிவித்தார்.
தங்களுக்குக் கிடைத்த
தகவலின் அடிப்படையில், மோசடியாக
அறிவிக்கப்பட்ட பொருட்கள் அடங்கிய ஒரு கொள்கலனை தங்களது அதிகாரிகள் தடுத்து
நிறுத்தியதாக அவர் கூறினார்.
ஆய்வில், கிட்டத்தட்ட 175 கிலோ புகையிலை பொருட்கள்
அடங்கிய 72 பெட்டிகளையும், 2,862 கிலோ
மெல்லும் புகையிலை கொண்ட மற்றொரு 318 பெட்டிகளையும் கண்டறிந்ததாக அவர் கூறினார். சம்பந்தப்பட்ட கொள்கலன்
இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டது என்றும் கூறினார்.
இந்நிலையில் 1967
சுங்கச் சட்டத்தின் பிரிவு 114 இன் கீழ் கடத்தல் பொருள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
விசாரணைகளுக்கு உதவ ஒரு சந்தேக நபரையும் கைது செய்துள்ளதாக அவர் கூறினார்!
Pihak kastam merampas produk tembakau kunyah bernilai RM1 juta di Westport, Klang, dalam serbuan pada 1 Mac. Kontena dari India disita dengan 175 kg dan 2,862 kg tembakau. Seorang suspek ditahan, dan siasatan dilakukan di bawah Akta Kastam 1967.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *