உலகின் உயரிய இஸ்லாமிய நிதி தலைமைத்துவ விருது! - அன்வாருக்கு வ்ழங்கப்பட்டது
- Shan Siva
- 11 Sep, 2025
கோலாலம்பூர், செப் 11: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய இஸ்லாமிய நிதி தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது.
இஸ்லாமிய நிதி
அமைப்பின் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக திரைக்குப் பின்னால் அயராது உழைத்து, தங்கள் நேரத்தையும் சக்தியையும் தியாகம் செய்த கல்வியாளர்கள் மற்றும் கொள்கை
வகுப்பாளர்கள் உட்பட பாராட்டப்படாத ஹீரோக்களுக்கு இந்த விருதினை சமர்ப்பிப்பதாக அன்வார்
தனது உரையில் தெரிவித்தார்.
தேசிய நிதி
நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கும் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதிக்கான புதிய
கட்டமைப்பை நிறுவுவதற்கும் பங்களித்த முன்னோடிகள் மற்றும் நிறுவனர்களுடன் சேர்ந்து
இந்த விருதை கொண்டாட முடிந்ததற்காக நிதியமைச்சருமான அவர் தனது நன்றியைத்
தெரிவித்தார்.
இந்த
மதிப்புமிக்க வருடாந்திர விருதை இன்று உலகளாவிய இஸ்லாமிய நிதி விருதுகள் (GIFA) 2025 இன் தலைவர் பேராசிரியர் ஹுமாயோன் டார் வழங்கினார்.
இந்த அங்கீகாரம்
அவர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்று நான் நம்புகிறேன். இது ஆரம்பத்தில் இருந்தே
மிகவும் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தவர்கள், ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், தொலைநோக்கு
பார்வையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கானது என்று கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



