அவர்கள் முட்டாள்கள்! - அன்வார்

- Shan Siva
- 07 Apr, 2025
புத்ராஜெயா, ஏப்ரல் 7: கோலாலம்பூர் ஜலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் அமைந்துள்ள கோயிலை இடமாற்றம் செய்யவிருப்பதையும், தலைநகரில் அமலாக்க அதிகாரிகளுக்கும் பலூன் விற்பனையாளருக்கும் இடையே அண்மையில் நடந்த மோதலையும் அரசியலாக்குபவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கடுமையாக சாடினார்.
இணக்கமான
முறையில் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளை பரபரப்பாக்குவதன் மூலம் சமூக ஊடக
பயனர்கள் சில நேரங்களில் ஒரு மடு அளவு பிரச்னையைக் கூட மலை அளவுக்கு உருவாக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.
இத்தகையவர்களுக்கு
இதுபோன்ற பிரச்சினைகளை பரபரப்பாக்க எந்த இடமும் கொடுக்காதீர்கள்.
அவர்கள்
முட்டாள்கள், பொதுமக்களின்
நலன்களைப் பற்றி சிந்திப்பதில்லை. அவர்கள் இதுபோன்ற விஷயங்களை அரசியலாக்க
விரும்புகிறார்கள் என்று பிரதமர்
துறையின் மாதாந்திர கூட்டத்தில் பிரதமர் கூறினார்.
அத்தகையவர்களை நயவஞ்சகர்கள் என்று முத்திரை குத்துவதில் எந்த தயக்கமும் இருக்காது என்றும் அன்வார் கூறினார்!
Perdana Menteri Anwar Ibrahim mengecam pihak yang mempolitikkan isu pemindahan kuil di Jalan Masjid India dan insiden penjual belon. Beliau menyatakan isu boleh diselesaikan secara harmoni tetapi dibesar-besarkan di media sosial. Anwar menyifatkan mereka yang mempolitikkan isu ini sebagai penipu dan tidak memikirkan kepentingan rakyat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *