இந்திய ஆய்வியல் துறை மாணவர்களை ஊக்குவிக்க ஓம்ஸ் தியாகராஜன் தங்கப் பதக்கம் வழங்கிவருகிறார்!

top-news
FREE WEBSITE AD

மலாயா பல்கலக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் தமிழ் படிப்பதோடு பல்வேறு தொழில்நுட்ப துறைகளில் கூடுதல் சான்றிதழ் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிக இருக்கிறது. தமிழ்த் துறையில் படிப்பவர்கள் மற்ற துறைகளில் கூடுதல் பயிற்சிகளை சுலபமாக பெறக் கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

இந்திய ஆய்வியல் துறையில் படித்த மாணவி தங்கம் பெற்றுக் கொண்டு, தாம் தமிழ்த் துறையில் படித்துக் கொண்டு வேலை வாய்ப்புள்ள துறைகளில் படித்து அதிக சான்றிதழைபெற்று இருக்கிறேன். நான் பெற்ற சான்றிதழ் என் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவும் என்று கூறி பெருமைப்பட்டார்.

தமிழ் படித்த மாணவர்கள் ஆறாம் படிவத்தில் மூன்று புள்ளிகளுக்கு குறைவில்லாமல் நிறைவு செய்திருந்தால், இந்திய ஆய்வியல் துறையில் படிக்க விண்ணப்பிக்கலாம். கடந்த காலங்களில் 40 மாணவர்கள் படிக்க வாய்ப்பு இருந்தும் அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் ஆண்டுதோறும் 30 மாணவர்கள் மட்டுமே படிக்க முன் வந்திருக்கிறார்கள். இந்திய ஆய்வியல் துறை மூலம் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நிதியை புறக்கணிப்பது நம்மையே ஏமாற்றிக் கொள்வதாகும். மானாவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் இந்த ஆய்வியல் துறைக்கு 50 இடங்களுக்கு மேல் வாய்ப்பு அதிகரிக்கும் நிலை இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

இந்திய ஆய்வில் துறை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசாக ஓம்ஸ் தியாகராஜன் கடந்த பல ஆண்டுகளாக தங்கப்பதக்கம் வழங்கி வருகிறார். அவர் தமிழுக்கு ஆற்றும் அறப்பணியை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இந்திய ஆய்வியல் துறையில் தமிழ் படித்து தங்கப் பதக்கம் பெறவேண்டுமென்று மலேசியத் தமிழ்க் காப்பகம் விரும்புகிறது.

ஆய்வு பட்டப் படிப்பை மேற்கொள்ள தேசிய நில நிதிகூட்டுறவு சங்கத்தின் தலைவர் தலைமையில் இயங்கும் தான்ஸ்ரீ சோமா அறவாரியம் மற்றும் தான்ஸ்ரீ குமரன் தலைமையில் இயங்கும் தமிழவேள் கோ.சா அறவாரியம் உட்பட பலர் ஆய்வுக்கு நிதி வழங்கியுள்ளதையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் ஆய்வியல் துறையில் தமிழ்க் கல்வியை மேற்கொள்ள அதிகமான மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்திய ஆய்வியல் துறைக்கு விண்ணப்பிக்க தமிழ்ப் பள்ளிமாணவர்கள் ஐந்தாம் படிவத்தில் தமிழ், தமிழ் இலக்கியம் படிப்பதும் தேர்வு பெறுவதும் அவசியமாகுமென்று மலேசியத் தமிழ் மணி மன்றத்தின் தேசியத் தலைவருமான சு.வை.லிங்கம் தெரிவித்துக்கொள்கிறார்.

Pelajar Tamil di Universiti Malaya berpeluang memperoleh sijil tambahan dalam bidang teknikal. Walaupun 40 tempat ditawarkan, hanya 30 pelajar mendaftar setiap tahun. Pelajar digalakkan memohon dan manfaatkan bantuan kewangan serta sokongan badan kebajikan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *