விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும்?
- Muthu Kumar
- 30 Jan, 2026
விமானப் பயணத்தின் போது நடுவானில் குழந்தை பிறப்பது ஒரு அபூர்வமான நிகழ்வு. அப்படிப் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டின் குடியுரிமை கிடைக்கும் மற்றும் அவர்களுக்கான சலுகைகள் குறித்த விதிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.
சில நாடுகள் தங்களது வான் எல்லைக்குள் விமானம் பறக்கும்போது குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்குத் தங்களது நாட்டின் குடியுரிமையை வழங்குகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளை எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு சர்வதேச விமானம் அமெரிக்க வான்பரப்பில் பறக்கும்போது குழந்தை பிறந்தால், பெற்றோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்தக் குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைக்க வாய்ப்பு உண்டு.
ஆனால் பெரும்பாலான நாடுகள் ரத்த உறவு சட்டத்தை பின்பற்றுகின்றன. இதன்படி, குழந்தை எங்கு பிறந்தாலும் அதன் பெற்றோரின் குடியுரிமையே அந்த குழந்தைக்கும் வழங்கப்படும். உதாரணத்திற்கு இந்தியப் பெற்றோர்களுக்கு நடுவானில் குழந்தை பிறந்தால், அந்த குழந்தை இந்தியக் குடிமகனாகவே கருதப்படும்.
சில நேரங்களில், விமானம் எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த நாட்டின் சட்டப்படி குடியுரிமை தீர்மானிக்கப்படும். 1961-ல் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தத்தின்படி, கடலுக்கு மேலே சர்வதேச வான்பரப்பில் குழந்தை பிறந்தால், அந்த விமானம் எந்த நாட்டுக்குச் சொந்தமானதோ அந்த நாட்டின் மண்ணில் பிறந்ததாகக் கருதப்படும்.
பலரும் நினைப்பது போல, நடுவானில் பிறந்தால் அந்த விமான நிறுவனத்தில் ஆயுள் முழுவதும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்பது ஒரு கட்டுக்கதை. ஆனால், Thai Airways, AirAsia போன்ற சில நிறுவனங்கள் இது போன்ற குழந்தைகளுக்கு அரிதாக அத்தகைய சலுகைகளை வழங்கியுள்ளன.
குழந்தை பிறந்தவுடன், விமானத்தின் கேப்டன் அந்தத் தகவலை அருகிலுள்ள வான் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிப்பார். அந்த விமானம் அடுத்து எந்த நாட்டில் தரையிறங்குகிறதோ, அந்த நாட்டு அதிகாரிகளிடம் பிறப்பு குறித்த தகவல்கள் சமர்ப்பிக்கப்படும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



