கம்ப இராமாயண சிறப்புகள்

top-news
FREE WEBSITE AD

தமிழுக்குக் கதி எனப் போற்றப்படும் கம்பராமாயணம், தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பிய வளர்ச்சியின் உச்சமாகத் திகழ்கிறது. கவிச்சக்ரவர்த்தி கம்பரால் (கி.பி. 1180-1250) இயற்றப்பட்ட இந்நூல், 6 காண்டங்களையும் படலங்களையும் கொண்டது. அறம், சமயக் கருத்துக்கள் மற்றும் சிறந்த மனித ஒழுக்கங்களை உள்ளடக்கிய இதன் சிறப்புகள்:'தமிழுக்குக் கதி': திருக்குறளின் பெருமைக்கும் கம்பராமாயணத்தின் சிறப்புக்கும் இணையாக வேறு எந்த நூலையும் கூற முடியாது என்பதால், இவ்விரு நூல்களும் "தமிழுக்குக் கதி" என்று அழைக்கப்படுகின்றன.வாழ்வியல் சிந்தனைகள்: மனிதர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகள், பண்பாடு மற்றும் சிறந்த வாழ்வியல் நெறிகள் இராமாயணத்தில் கதை மாந்தர்கள் வாயிலாக வலியுறுத்தப்படுகின்றன.கவிதைத் திறன்: சொல்லழகும் பொருட்செறிவும் நிறைந்த கவிதை நடையைக் கொண்டது. கற்பனை நயமும் சந்த நயமும் மிகுந்த பாடல்கள் இதன் தனிச்சிறப்பு.கம்பனின் சிறப்பு: 'கல்வியிற் பெரியர் கம்பன்' என்று போற்றப்படும் அளவுக்குப் பரந்த புலமையும், காப்பிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றுத் திகழும் பெருங்காப்பியம் இது. 

கம்பராமாயணம் (Kamba Ramayanam) எனும் நூல் கம்பரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். இராமாவதாரம் என்ற பெயரில் கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும் (வெவ்வேறு நூல்களிலும் பல வேறுபாடுகள் உண்டு). இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் தன் புலமையை வெளிக்காட்ட தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ் சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர், தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார். {("வடசொல் கிளவி வடஎழுத் தொரீ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே .

மூல இலக்கியமான வடமொழி இராமாயணத்திலிருந்து சில மாறுபாடுகளோடு கம்பர் இந்நூலை இயற்றியிருந்தார். கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால், இது கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.

கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 118 படலங்களையும் உடையது. இதில் 10589 பாடல்கள் உள்ளன. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய "உத்திர காண்டம்" என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய "ஒட்டக்கூத்தர்" இயற்றினார் என்பர். தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பரின் காலத்தில் (பொ.ஊ. பன்னிரண்டாம் நூற்றாண்டு) உச்சநிலையினை அடைந்தது என்பர். இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் "தமிழுக்குக் கதி" (கம்பராமாயணம் திருக்குறள்) என்பர்.

கம்பரின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு. கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் நெடுகிலும் மின்னி மிளிர்கின்றன. "வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணூற்றாறே (யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை 96)" என்றொரு கணக்கீடும் உண்டு.

கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. அணி, பொருள், நடை ஆகியவற்றால் சிறந்து விளங்குவது. சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு தமிழ்ப் பண்பாட்டோடு இயைந்து விளங்குவது.

காப்பியக் காலம்

கம்பராமாயணத்தில் உள்ள பாடல்களையும், கம்பரின் வாழ்வினையும் கொண்டு கம்ப இராமாயணம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[2] சிலர் கம்பராமாயணம் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தது, பத்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தது என்றும் கூறியுள்ளார்கள். வையாபுரிப்பிள்ளை என்பவர் கம்பர் தனியன்கள் என்பதினை 16ம் நூற்றாண்டில் சிலர் புகுத்தியிருக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.[2] இந்த கம்பர் தனியன்களில் பதினேழு பாடல்கள் உள்ளன. அவற்றில் எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழில் மேல் என்ற தொடர் அமைந்துள்ளது. இதனைக் கொண்டு பொ.ஊ. 885ல் இராமாயணம் இயற்றப்பட்டிருக்கக் கூடும் என்கின்றனர்.

மா.இராசமாணிக்கனார் பொ.ஊ. 1325க்கும் முன்பே கம்பராமாயணம் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கன்னட நாட்டில் உள்ள கல்வெட்டினைக் கொண்டு குறிப்பிடுகிறார். எனினும் இறுதியாக கம்பர் மூன்றாம் குலோத்துங்க சோழனோடு மாறுபட்டு தற்போதைய ஆந்திராவில் இருக்கும் ஓரங்கல் எனும் பகுதியில் தங்கியிருக்கிறார். அப்போது அவ்விடத்தில் இருந்த அரசன் பிரதாபருத்திரன் என்பவராவார். அவருடைய காலம் பொ.ஊ. 1162–1197 ஆகும். இதனால் கம்பர் 12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து கம்பராமாயணத்தினை இயற்றியுள்ளார். 

குறிப்பு:- கதை அடுத்த வாரம் தொடரும்

:- லட் சுமி சுப்பிரமணியம்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *