ஆன்லைனில் அதிகரிக்கும் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயேகம்! - அமைச்சு வருத்தம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 18: நாட்டில் ஆன்லைனில் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான  வழக்குகள் ஆபத்தான அளவிற்கு அதிகரித்துள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக நல மேம்பாட்டுத்துறை  அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.  இந்த போக்கு அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் இருப்பதாக அவர் கூறினார்.

இந்தப் போக்கு மேலும் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது என்று அவர் கஇன்று 2025 ஆம் ஆண்டு குழந்தைகள் ஆன்லைன் பாதுகாப்பு குறித்த ஆசியான் ஐசிடி மன்ற நிகழ்வின் போது  செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் ஆன்லைனில் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து அறிந்திருக்காமல் இருக்கலாம் என்பதால் நிலைமை கவலைக்குரியது என்று அவர் அறிவுறுத்தினார்.

 சில பெற்றோர்கள், குறிப்பாக வேலையில் மும்முரமாக இருக்கும் பெற்றோர்கள் அல்லது ஆன்லைன் உலகின் விளைவுகளைப் புரிந்து கொள்ளாத பெற்றோர்கள் இந்த அபாயங்கள் பற்றி அறிந்திருக்கவில்லை என்று அஞ்சப்படுவதாக அவர் கூறினார்.

சில குழந்தைகள் அறியாமலேயே தங்களை ஆபத்துகளுக்கு ஆளாக்கக்கூடும் என்று நான்சி சுட்டிக்காட்டினார்.

எனவே, குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு ஒரு கூட்டு அணுகுமுறை தேவை என்று அவர் வலியுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *