திருட்டில் ஈடுபட்ட 81 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது!
- Thinagaren Sanggaren
- 29 Jul, 2025
ஜூலை 29,
தோட்டத்தில் வேலை செய்து வந்ததாக நம்பப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேட்ட உரிமையாளர்களுக்குத் தெரியாமல் செம்பனை பழங்களைத் திருடியதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாலை 1 மணிக்குத் தெலுக் இந்தானில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் சோதனையை மேற்கொண்ட போது செம்பனை பழங்களை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த 81 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது செய்ததாக ஹிலிர் பேராக் மாவட்டக் காவல் ஆணையர் Dr Bakri Zainal Abidin தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 81 வெளிநாட்டினர்களும்
பேராக்கில் உள்ள பல்வேறு செம்பனைத் தோட்டங்களில் வேலை செய்து வரும் 20 முதல் 56 வயதுக்குற்பட்ட
இந்தோனேசியர்கள் என தெரிய வந்துள்ளதாக ஹிலிர் பேராக் மாவட்டக் காவல் ஆணையர் Dr
Bakri Zainal Abidin தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 56 வெளிநாட்டினர்களிடம்
எந்தவோர் அடையாள ஆவணங்களும் இல்லை என்றும் 25 வெளிநாட்டினர்களின் தொழிலாளர் உரிமம்
காலாவதியாகியிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஹிலிர் பேராக் மாவட்டக் காவல் ஆணையர் Dr Bakri Zainal Abidin தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



