இமயமலை பிராந்தியத்திற்கு இரட்டை ஆபத்து

top-news
FREE WEBSITE AD

காத்மாண்டு, ஜூன் 12 –

காலநிலை மாற்றத்தின் தீவிர தாக்கத்தால் இந்து குஷ் – இமயமலை பிராந்தியத்தில் இந்த ஆண்டு வறட்சி மற்றும் திடீர் வெள்ளம் ஆகிய இரட்டை ஆபத்துகள் ஒரே நேரத்தில் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட எட்டு நாடுகளை உள்ளடக்கிய இந்தப் பரந்த மலைப்பகுதி, சுமார் 200 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இருப்பினும், புவி வெப்பமயமாதலால் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை பதிவாகும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பருவமழை குறைவாக இருந்தாலும், நீண்டகால வறண்ட காலநிலைக்குப் பிறகு மிகக் குறுகிய நேரத்தில் மிக அதிகளவில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக திடீர் வெள்ளம் மற்றும் கடுமையான நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மலைப்பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோர மக்களும், விவசாயத்தை நம்பி வாழும் சமூகங்களும் அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் உயிரிழப்பு, சொத்து சேதம் மற்றும் வாழ்வாதார பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *