எல்லை தாண்டிய சீனா! தைவான் வான்பரப்பில் 57 போர் விமானங்கள்!
- Muthu Kumar
- 01 Jan, 2026
தைவான் நாட்டைச் சுற்றி சீனா மீண்டும் தனது ராணுவ பலத்தைக் காட்டி அச்சுறுத்தி வரும் சூழலில், ஒரே நாளில் 77 சீன போர் விமானங்கள் மற்றும் 17 போர்க்கப்பல்கள் தைவான் எல்லைக்கு அருகே கண்டறியப்பட்டுள்ளன.
தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் (PLA) தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிகப் பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டது. இதில் 77 போர் விமானங்கள் மற்றும் 17 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன.
கண்டறியப்பட்ட 77 போர் விமானங்களில், 57 விமானங்கள் தைவான் ஜலசந்தியின் மத்திய கோட்டை தாண்டி தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்து உள்ளதாக கூறப்படுகிறது.சீன ராணுவத்தின் இந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தைவான் தனது சொந்த ஏவுகணை அமைப்புகள், போர் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலம் சீனப் படைகளைக் கூர்ந்து கவனித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என உரிமை கோரும் சீனா, சமீபகாலமாக இது போன்ற அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த அதிரடி ராணுவப் பயிற்சியைச் சீனா மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



