தேசிய இந்து அறப்பணி வாரியம் அமைக்க வேண்டும்! – பிரகாஷ் வலியுறுத்து!
- Thinagaren Sanggaren
- 15 Feb, 2026
பிப்ரவரி 15,
கோயில்களுக்கு எதிராகச் செயல்படும் கும்பலை எதிர்த்து நாம் ஒன்றிணைய வேண்டும் என்றால் முறையான திட்டமிடல் இருக்க வேண்டும் என சிலாங்கூர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தினார். வழக்கறிஞருமான பிரகாஷ், கோயில் நிர்வாகங்கள் முறையாகப் பதிவு செய்யாமல் இருப்பதாலும் குறைந்த எண்ணிக்கையிலானக் கோயில்களே சங்கங்கள் பதிவு இலாகாவான ROS-இல் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு ஒரே தீர்வு என்றால் தேசிய அளவில் இயங்கும்படியாக இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அப்படியான இந்து அறப்பணி வாரியம் நாடாளுமன்றச் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தினார். தேசிய இந்து அறப்பணி வாரியத்தின் மூலமாக அனைத்து கோயில்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு, நிரந்தரமாக நிலம் வழங்கப்பட்டு, ஆண்டுக் கணக்கறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதை இந்து அறப்பணி வாரியம் உறுதி செய்ய வேண்டும் என வழக்கறிஞருமான பிரகாஷ் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



