தீபாவளி வாழ்த்தில் தவறு! இந்துக்களிடம் மன்னிப்புக கேட்ட மகாதீர்!
- Thinagaren Sanggaren
- 21 Oct, 2025
அக்தோபர் 21,
தீபாவளியை முன்னிட்டு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தி சரச்சையைக் கிளப்பியிருந்த நிலையில் இது தனது ஊடகத் துறையின் தவறு என்றும் அதற்கு இந்துக்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் துன் மகாதீர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். இது தற்செயலாகத் தனது ஊடக நிர்வாகியால் நிகழந்தது. இதனால் இந்துக்களின் மனம் புன்பட்டருந்தால் தனது முகநூல் Admin மன்னிப்புக் கோருவதாக மகாதீர் தெரிவித்தார்.
நேற்று தீபாவளியை முன்னிட்டு மகாதீரின் முகநூலில் மெழுகுவர்த்தியுடன் தீபாவளி வாழ்த்துச் செய்தி பகிரப்பட்டதும் சமூகவலைத்தலவாசிகள் தீபத்திற்கும் மெழுகுவர்த்திக்குமான வேறுபாடுகளைப் பகிர்ந்தனர். சிலர் மகாதீரின் வாழ்த்துக்கு நன்றி என தெரிவித்து கண்டனத்தையும் பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று காலை புதிய தீபாவளி வாழ்த்துடன் மகாதீரின் முகநூலில் பகிரப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



