மலேசிய இந்து சங்கத் தேர்தல் முடிவு!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 20

இன்று நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் 48 ஆவது பேராளர் மாநாட்டில் நடப்பு தலைவரான தங்க கணேசன் அணி அவரை எதிர்த்துப் போட்டிய கணேஸ்பாபு அணியை வீழ்த்தினர். இந்த தேர்தல் முடிவில் தங்க கணேசன் மலேசிய இந்து சங்கத்தின் தலைவராகவும், துணைத் தலைவராக பாலக்கிருஷ்ணன் அவர்களும் முன்னாள் இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் உதவித் தலைவராகவும் மற்றொரு உதவித் தலைவராக விநாயகமூர்த்தி ஆகியோர் பொறுப்பேற்றனர். தங்க கணேசன் அணியில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் 8 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

தங்க கணேசன் 1102 வாக்குகளும், ஆனந்த கோபி 1091 வாக்குகளும்,  அடுத்தடுத்த நிலையில் கே.தினகரன், மோகன் ஷான், சுஜிற்றா ஜெயசீலன், அரிதாசன், சதீஸ், ஏரா பெருமாள், ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்து சங்கத்திற்குப் புதிய தலைமைத்துவம் வேண்டும் என நடப்புத் தலைமையை எதிர்த்துப் போட்டியிட்ட கணேஸ் பாபு 1028 வாக்குகள் மட்டுமே பெற்றார். மலேசிய இந்து சங்கத்தின் செயலாளராகத் தொண்டர்மணி கனாமூர்த்தி, துணைச் செயலாளராக அழகேந்திரன் பொருளாளராக ஏரா பெருமாள் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *