சீனாவின் பெருநிறுவனமான JD.com மலேசியாவில் கால்பதிக்கிறது!
- Shan Siva
- 02 Sep, 2025
பெய்ஜிங்: சீனாவின் மின் வணிக நிறுவனமான JD.com, மலேசியாவில், குறிப்பாக தளவாடத் துறையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இன்று காலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடனான நிறுவனத்தின் சந்திப்பின் விளைவாக இது அமைந்தது.
மின் வணிகம் மற்றும் தளவாடத் துறைகளில் முக்கிய பங்கு வகிக்கும் JD.com, சீனாவில் சந்தைப்படுத்துவதற்காக மேலும் மலேசிய தயாரிப்புகளை வாங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



