RM23.53 மில்லியன் அங்பாவ்! டோட்டோ தந்த உற்சாகத்தில் சீன தம்பதியினர்
- Shan Siva
- 13 Feb, 2026
கோலாலம்பூர், பி 13: சிலாங்கூரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டை எண்களின் கடைசி நான்கு இலக்கங்களை வாங்கி, டோட்டோ 4D ஜாக்பாட் 1 விளையாட்டில் RM23.53 மில்லியனை வென்றனர்.
49 வயதான ஒரு மார்க்கெட்டிங் மேலாளரும், அவரது 66 வயது இணையரும், 6777 மற்றும் 5085 எண்களை ஒரு நிலையான RM2 பந்தயமாக வைத்தனர்.
அந்தப் பெண் வழக்கமாக டிக்கெட்டுகளை வாங்குவதாகவும், அவரது இணையர் எண்களைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்வதாகவும் கூறினார். ஒவ்வொரு முறையும் டோட்டோ கடைக்குச் செல்லும்போது வழக்கமாக RM200 முதல் RM300 வரை செலவிடுவது வழக்கம் என்று தெதிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக இந்த எண்களை விளையாடி வருவதாகவும், அவை ஒரு நாள் எங்களுக்கு இவ்வளவு பெரிய வெற்றியைக் கொண்டு வரும் என்று நினைத்துப் பார்த்ததில்லை என்றும் சம்பந்தப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
சீனப் புத்தாண்டுக்கு முன்னதாக இந்த வெற்றியை சரியான நேரத்தில் ஒரு பெரிய அங்பாவ் என்று விவரித்த தம்பதியினர், தங்கள் தொழிலை விரிவுபடுத்தவும், வீடு வாங்கவும், எதிர்காலத்திற்காக சேமிப்பை ஒதுக்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



