பட்ஜெட்டில் திருக்குறள்! அசத்திய அன்வார்
- Shan Siva
- 10 Oct, 2025
கோலாலம்பூர், அக் 10: இன்றைய 2026 பட்ஜெட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீபாவளி வாழ்த்துகளை தமிழில் சகோதர சகோதரிகளே என விழித்து தீபாவளி வாழ்த்துகள் எனத் தெரிவித்ததோடு, வழக்கம்போல் திருக்குறளையும் தமிழில் உச்சரித்து ஆச்சரியப்படுத்தினார். சரியாக உச்சரிக்கவில்லை என்றதும் ஐயோ என தமிழில் சிரித்துக்கொண்டே கூறினார்.
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி
என்பதே அவர் உச்சரித்த திருக்குறள்.
பொருள் கேடும், பொருள் பெருக்கமும் வாழ்வில் இல்லாதன அல்ல; நெஞ்சத்தில் என்றும் நடுவுநிலைமை கோணாதிருப்பதே சான்றோர்க்கு அழகாகும் என்பதே இக்குறளின்
பொருள்.
உலகம் போற்றும் ஒரு தலைவர் முக்கிய நிதி நிலை அறிக்கையில் வள்ளுவத்தைப் போற்றுவது, வள்ளுவம் அனைவரையும் சென்று சேரும் என்பதால் நம் பிரதமருக்கும் நாம் நன்றி சொல்வோம்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



