அம்னோவில் சேர விண்ணப்பிக்கமாட்டேன்! Hishammuddin திட்டவட்டம்!

top-news

ஜூலை 1,


அம்னோவில் மீண்டும் தம்மை இணைத்துக்கொள்ளும்படி என்னால் கெஞ்ச முடியாது என Datuk Seri Hishammuddin Hussein திட்டவட்டமாக மறுத்துள்ளார். அம்னோவின் முன்னாள் உதவித் தலைவர் Datuk Seri Hishammuddin Hussein மீண்டும் அம்னோவில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என ஜொகூர் மாநில அம்னோ உறுப்பினர்கள் முறையிட்டதும் அம்னோ தலைவர் ZAHID HAMIDI எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கமால் Datuk Seri Hishammuddin Hussein அம்னோ உச்சமன்றத்திற்குத் தம்மை சேர்த்து கொள்ளும்படி கோரிக்கைக் கடிதம் அனுப்பினால் அம்னோ உச்சமன்றம் பரிசீலனை செய்யும் என குறிப்பிட்டிருந்தார். 

அம்னோ உச்சமன்றத்திடம் என்னை மீண்டும் அம்னோவில் சேர்த்துக்கொள்ளும்படி கெஞ்ச முடியாது என Datuk Seri Hishammuddin Hussein இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். கடந்த 2023 என்னை அம்னோவிலிருந்து நீக்குவதற்கு எந்தவொரு முகாந்தாரமும் இல்லை. இதுவரையும் என்ன குற்றச்சாட்டு என்பதைக் கூட அம்னோ உச்சமன்றம் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்க இப்போது என்னை மீண்டும் அம்னோவில் சேர்த்துக்கொள்ளும்படி நான் கோரிக்கை கடிதம் அனுப்பினால் என் மீதானக் குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்ளும்படியாக அமைவதால் நான் கோரிக்கைக் கடிதத்தை அனுப்பமாட்டேன் என Datuk Seri Hishammuddin Hussein மறுத்துள்ளார்.


Datuk Seri Hishammuddin Hussein menegaskan beliau tidak akan merayu untuk kembali menyertai UMNO. Beliau menolak menghantar surat permohonan semula kerana mendakwa dirinya dipecat tanpa sebarang sebab yang jelas oleh Majlis Tertinggi UMNO pada 2023.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *