இது வரலாற்று வெற்றி! - மக்களின் நம்பிக்கையை வீணாக்கமாட்டோம்! - பாஸ்
- Shan Siva
- 01 Dec, 2025
கோலாலம்பூர், டிச 1: கிழக்கு மலேசிய மாநிலத்தில் முதல் முறையாக ஒரு
இடத்தை வென்று, சபா தேர்தலில் வரலாற்று
சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற பாஸ் கட்சி, அதன் களப் பணியாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் நன்றியைத்
தெரிவித்துள்ளது.
அலியாக்பர்
குலாசனின் வெற்றி, கரம்புனையில்
உள்ள வாக்காளர்கள், அவர்களின்
பின்னணியைப் பொருட்படுத்தாமல், பெரிகாத்தான்
நேஷனலில் வைத்திருந்த நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அக்கட்சியின்
பொதுச் செயலாளர் தக்கியுதீன் ஹாசன் ஒரு அறிக்கையில் கூறினார்.
பெரிக்கத்தான் மற்றும் பாஸ், எங்களுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்தை, மக்களின் நம்பிக்கையை வீணாக்க மாட்டோம் என்றும், சபா மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



