இது ஒரு வகையான மிரட்டல்! - ரஃபிஸி திடீர் ஆதங்கம்
- Shan Siva
- 09 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 9: அண்மையில் முடிவடைந்த
PKR கட்சித் தேர்தல்கள் குறித்து கருத்து
தெரிவித்த பல இணையவாசிகள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரஃபிஸி ராம்லி, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி மற்றும் காவல்துறையிடம்
கேள்வி எழுப்பியுள்ளார்.
பிகேஆர்
தேர்தல்கள் குறித்து சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்ட பிறகு எம்சிஎம்சியின்
பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளாகியதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து ஏராளமான
புகார்களைப் பெற்றதாக ரஃபிஸி கூறினார்.
அவர்களில்
சிலரின் உள்ளடக்கம் சட்டத்தை மீறுவதாகக் கூறப்பட்டதாகவும், மற்றவர்களை எம்சிஎம்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் அணுகியதாகவும் அவர்
கூறினார்.
சிலர்
விசாரணையில் இருப்பதாகவும், அவர்களின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் சிம்
கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த மாதத்
தேர்தலில் பிகேஆர் துணைத் தலைவர் பதவியை இழந்த ரஃபிஸி, விசாரணையின் கீழ் உள்ள பெரும்பாலான உள்ளடக்கங்கள் கட்சித் தேர்தல்கள் குறித்த
மக்களின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், எந்தச் சட்டத்தையும்
மீறவில்லை என்றும் விளக்கினார்.
இந்தப் புகார்களைப் பரிசீலித்த பிறகு, பிகேஆர் தேர்தல்கள் குறித்த உள்ளடக்கத்தை வெளியிடுவதைத் தவிர்க்க பொதுமக்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வகையான மிரட்டல் இது என்பது தனது கருத்து என அவர் குற்றம் சாட்டினார்!
Ahli Parlimen Pandan, Rafizi Ramli, soal tindakan MCMC dan polis terhadap pengguna media sosial yang mengkritik pemilihan PKR. Rafizi dakwa kebanyakan komen adalah pendapat peribadi dan tindakan tersebut dianggap sebagai ugutan kepada rakyat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



