இது சர்வதேச சட்ட மீறல்! டிரம்ப் நடவடிக்கை குறித்து பெர்சாத்து
- Shan Siva
- 06 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 6: வெனிசுவேலா மீது அமெரிக்கா மேற்கொண்டதாக கூறப்படும் இராணுவ நடவடிக்கை சர்வதேச சட்ட மீறல் எனக் கூறிய பெர்சாத்து கட்சி, இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மூலம் மலேசியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ முகமது அஸ்மின் அலி, இந்த நடவடிக்கை ஐ.நா. சட்டப்பிரகடனத்தின் பிரிவு 2(4)-ஐ மீறும் ஒருதலைப்பட்சமான சட்டவிரோத செயல் என தெரிவித்துள்ளார். மேலும், உலக அமைதியை வன்முறையால் நிலைநாட்ட முடியாது என்றும் அவர் கூறினார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



