'ஷெரட்டான் மூவ்' மாதிரி இது 'பெர்லிஸ் மூவ்' முகைதீனுக்கு துரோகம் புதிதல்ல! - PAS கட்சியை அழைக்கும் PKR
- Shan Siva
- 02 Jan, 2026
கோலாலம்பூர், ஜான் 2: சிலாங்கூர் PKR இளைஞர் அணியின் தலைவர் முகமது இமான் ஹாஸிக், பாஸ் கட்சி பொறுப்புடனும் முதிர்ச்சியுடனும் ஒன்றிய அரசில் இணைவது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை தரும் அரசியல் முடிவாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஒன்றிய அரசில் இணைவது பாஸ் கட்சி அரசியல் ரீதியாக வெற்றி அல்லது தோல்வி அடைவதாக அர்த்தமல்ல. மாறாக, 75 ஆண்டுகளுக்கு அருகிலான அரசியல் முதிர்ச்சியைக் கொண்ட ஒரு பெருந்தன்மைமிக்க கட்சியாக பாஸ் தன்னை நிரூபிப்பதாக இருக்கும். தனிப்பட்ட அதிகார ஆசைகளை விட மக்களின் நலன் முதன்மைப்படுத்தப்பட வேண்டிய நேரம் இது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து, பெர்லிஸ் அரசியல் நெருக்கடி மற்றும் பெரிகாத்தான் நேஷனல் தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ முகைதீன் யாசின் விலகியதையடுத்து, பாஸ் – பெர்சாத்து (Bersatu) கட்சிகளுக்கிடையேயான பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் வெளியாகியுள்ளது.
பெர்சாத்து கட்சி அரசியல் துரோகங்களில் புதியது அல்ல. மக்களின் நம்பிக்கையைச் சிதைத்த ‘ஷெரட்டன் மூவ்’ சம்பவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது என இமான் ஹாஸிக் மேலும் விமர்சித்தார்.
பாஸ் – பெர்சாத்து உறவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்களை தா மிகுந்த கவலையுடன் கவனித்து வருவதாகத் தெரிவித்த அவர், இது பொதுவெளியில் வெளிப்படையாகத் தெரிகிறது. பரஸ்பர சந்தேகங்களால் நிறைந்த, பலவீனமான கூட்டணியின் கைகளில் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது என்பதையே இது உணர்த்துகிறது என்றார்.
மேலும், தற்போது நிலவும் சூழல் ‘பெர்லிஸ் மூவ்’ என அழைக்கத்தக்க நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பெர்சாத்து கட்சி இதைப் புறக்கணித்தாலும், அதிகார ஆசையால் இயக்கப்படும் குறுகிய அரசியலையே இது வெளிப்படுத்துகிறது என சாடினார்.
நாட்டிற்கு அரசியல் நிலைத்தன்மையைத் தேவைப்படும் இந்த நேரத்தில், பெர்சாத்துவுடன் உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்ற சிலாங்கூர் பாஸ் இளைஞர் அணியின் கருத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் இமான் ஹாஸிக் தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



