அரசியல் நிலைத்தன்மைக்கு இது அவசியம்!- சபாவில் தேர்தல் களப்பணியில் ஓம்ஸ் பா.தியாகராஜன்

top-news
FREE WEBSITE AD

சபா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமரின் நட்பிற்கிணங்க சபா மாநிலத்திற்கு ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியகராஜன் வருகை புரிந்தார்.

அங்குள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்களுக்கு தமது  தமது ஆதரவை தெரிவித்தோடு, தேர்தல் பிரச்சார களப்பணிகளையும் பார்வையிட்டார்.

பெரும்பான்மை மிக்க பலத்துடன் ஓர் அரசாங்கம் அமைவதுதான் தேசத்தின் நலனாக அமையும். அரசின் நிலைத்தன்மைக்கு இது அவசியம். எனவே, மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பிரதமரின் தொலைநோக்கு எண்ணங்கள் ஈடேற மாநில வெற்றியை மக்கள் பிரதமருக்கு பரிசளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

ஊழல் இல்லாத அரசு, கறைபடியாத பிரதமர் நாட்டின் தேவை என அவர் கூறினார். அந்த வகையிலன்வார் தலைமையிலான பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என அவர் கேட்டுக்கொண்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *