பெரிக்காத்தானை வழிநடத்த பாஸுக்கு இதுவே சரியான நேரம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியை பாஸ் கட்சி வழி நடத்த வேண்டும் என்று. அக்கட்சியின் இளைஞர் பிரிவு நிறைவேற்றியிருக்கும் ஒரு தீர்மானத்திற்கு, அக்கட்சியின் ஆன்மிகத் தலைவர் ஹஷிம் ஜாசின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பெரிக்காத்தானையும் நாட்டையும் பாஸ் கட்சி வழி நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்ற எண்ணத்தையும் அவர் ஒப்புக் கொண்டிருக்கின்றார்."பேச்சுக்கள் நடத்தப்பட்ட பின்னர் கொள்கை சம்பந்தப்பட்ட ஒரு முடிவு பெரிக்காத்தான் நேஷனலில் எடுக்கப்பட வேண்டும் என்ற இத்தகைய எண்ணத்தை நான் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வந்திருக்கின்றேன்.

"தற்போது அவர்கள் (பெர்சத்து) விரும்பும் பல திட்டங்களை அறிவிக்கத் தொடங்கி இருக்கின்றனர். எனக்கு இதில் எந்த ஒரு சுயநலனும் இல்லை. அனைத்தும் கட்சிக்காகத்தான் பேசுகிறேன். ஆதலால், (பெர்சத்து) அவ்வாறு செய்வதற்கு பதிலாக முதலில் பேச்சு நடத்துங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். “ஆனால், பேச்சுக்களை நடத்துவதற்கு பதிலாக அவர்கள் நாளுக்கு நாள் தங்களின் முடிவுகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆதலால், பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு செய்திருக்கும் முடிவுக்கு நான் இணக்கம் தெரிவிக்கின்றேன்.

“இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நமது வெற்றியை உறுதிப்படுத்த இது உதவும் என்று நான் நம்புகிறேன் என்று கெடா. அலோர்ஸ்டாரில் நேற்று சனிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் ஹஷிம் ஜாசின் தெரிவித்தார்.
பாஸ் கட்சி பல்வேறு நிலைகளில் முன்னிலை வகித்து வருவதாகக் கூறிய அவர், நான்கு மாநிலங்களில் அடையப்பட்டுள்ள வெற்றியும் சீரான தேர்தல் கேந்திரங்களும் அவற்றில் அடங்கும் என்றார்.

பெரிக்காத்தான் நேஷனலின் தலைமைத்துவத்தை வழிநடத்தும் மற்றும் நாட்டை ஆட்சி புரியும் அதிகாரத்தை பாஸ் கட்சி தன் வசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரும் ஒரு தீர்மானத்தை, அக்கட்சியின் இளைஞர் பிரிவு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றி இருந்தது.

பெரிக்காத்தான் நேஷனலின் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு இடையில் வாய்ச் சண்டை நிலவுவதைத் தொடர்ந்து, பாஸ் இளைஞர் பிரிவு அத்தகைய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருக்கின்றது.இம்மாதத் தொடக்கத்தில் நடந்த பெர்சத்து கட்சியின் பொதுப் பேரவையில், பெரிக்காத்தான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கட்சித் தலைவர் முஹிடின் யாசினின் பெயரை அதன் பேராளர்கள் ஏகமனதாக ஆதரித்திருந்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *