திறக்கப்பட்டது ஈராக் – சிரியா எல்லை: ஹார்முஸ் முடக்கத்திற்கு மாற்றுப் பாதையா..?
- Surendran Sumdraraj
- 21 Apr, 2026
மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற சூழ்நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த ஈராக்–சிரியா எல்லை மீண்டும் திறக்கப்பட்டிருப்பது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, ரபியா எல்லைக் கடப்பாடு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த எல்லை கடந்த 2011ஆம் ஆண்டு சிரியா உள்நாட்டுப் போருக்குப் பிறகு மூடப்பட்டிருந்தது. பின்னர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டிலும் இருந்த இந்த பகுதி, பல ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இத்துடன், இந்த எல்லை திறப்பு வர்த்தகம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, கடல் மார்க்கமாக நடைபெறும் எண்ணெய் ஏற்றுமதி ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலப்பாதை மாற்று வழியாக கருதப்படுகிறது.
ஈராக் தற்போது சுமார் 6.5 இலட்சம் மெட்ரிக் டன் எரிபொருள் எண்ணெயை மாதந்தோறும் நிலப்பாதை வழியாக சிரியா வழியாக ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



