தொலைபேசி மோசடி - 2 லட்சத்துக்கும் அதிகமாக இழந்த முன்னாள் ஆசிரியை!

top-news
FREE WEBSITE AD

கோல திரெங்கானு, அக் 7: போலி காப்பீடு மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொலைபேசி மோசடியில் சிக்கி ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் RM200,300  இழந்தார்.

62 வயதான முன்னாள் KEMAS ஆசிரியருக்கு மே 25 அன்று காப்பீட்டு நிறுவன பிரதிநிதியாக நடித்து மோசடி செய்பவரிடமிருந்து அழைப்பு வந்தது.

மோசடி செய்பவர் அந்தப் பெண் மீது மோசடி காப்பீட்டு கோரிக்கையை விடுத்ததாக பொய்யாக குற்றம் சாட்டினார்.

பின்னர் அவரது அழைப்பு புக்கிட் அமானைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி என்று கூறிக்கொண்ட மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டது. சம்பந்தப்பட்டா போலி அதிகாரி பாதிக்கப்பட்டவரிடம் ஜாமீன் வழங்கி, விசாரணைக்காக பேங்க் நெகாராவில் உரிய பணத்தொ ஒப்படைப்பதன் மூலம் கைது செய்வதைத் தவிர்க்கலாம் என்று கூறினார்.

இதனை அடுத்து அழுத்தம் மற்றும் அச்சுறுத்தலுக்கு ஆளான பாதிக்கப்பட்டவர், தனது தபோங் ஹாஜி கணக்கிலிருந்து தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றினார். பின்னர் மோசடி செய்பவர்களிடம் தனது ரகசிய வங்கி விவரங்களை வெளிப்படுத்தும்படி கட்டாயப்படுத்தப்பட்டதையடுத்து,  நான்கு வெவ்வேறு கணக்குகளுக்கு மொத்தம் RM26,700 மதிப்புள்ள பல வங்கி பரிமாற்றங்களைச் செய்தார்.

பின்னர், தனது கணக்கிலிருந்து கூடுதலாக RM173,000 சட்டவிரோதமாக எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டபோதுதான் தான் மோசடி செய்யப்பட்டதை அவர் உணர்ந்துள்ளார்.

 ஜூன் 6 முதல் ஜூன் 19 வரை அவரது கணக்கிலிருந்து ஆறு அறியப்படாத கணக்குகளுக்கு 18 அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், மோசடி குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதை கோல திரெங்கானு காவல்துறைத் தலைவர் ACP அஸ்லி முகமது நூர் உறுதிப்படுத்தினார்.

இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தெரியாத அழைப்பாளர்களுடன் வங்கி விவரங்களை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *