ஹாங்காங் ஓபன் 2025: பேர்லி டான்-எம். தினா அரையிறுதிக்கு முன்னேறினர்

top-news

கோலாலம்பூர், செப். 14-

செய்தி-வெற்றி மைந்தன்

மலேசியாவின் மகளிர் இரட்டையர் ஜோடியான பெர்லி டான்-எம். தினா, ஹாங்காங் ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினர். ஹாங்காங் கொலிசியத்தில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில், இந்த ஜோடி, மற்றொரு மலேசிய ஜோடியான கோ பெய் கீ-தியோ மெய் சிங்கை 21-12, 21-15 என்ற நேர் செட் கணக்கில் 31 நிமிடங்களில் வீழ்த்தியது.

2025 உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடம் பிடித்த பெர்லி-தினா, முதல் செட்டின் ஆரம்பத்தில் கடுமையான போட்டியை எதிர்கொண்டனர். இரு ஜோடிகளும் 7-7 என்று புள்ளிகளில் சமநிலையில் இருந்தன. ஆனால், பெர்லி-தினா, தங்களின் ஒழுங்கமைக்கப்பட்ட ஆட்டத்தின் மூலம் முன்னிலை பெற்று, முதல் செட்டை 21-12 என்ற கணக்கில் எளிதாக வென்றனர்.

இரண்டாவது செட்டிலும் அவர்கள் தங்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்தனர். கோ பெய் கீ-தியோ மெய் சிங் ஜோடி, சில சமயங்களில் எதிர்ப்பு காட்டினாலும், பெர்லி-தினாவின் துல்லியமான ஷாட்கள், சிறப்பான ஒத்துழைப்பு, 21-15 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றி, அவர்களின் அரையிறுதி பயணத்தை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாமல், மலேசியாவின் மகளிர் இரட்டையர் பிரிவில் ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *