பிரிக்பீல்ட்ஸ் உணவகத்தில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் கொல்லப்பட்டார்!

- Shan Siva
- 14 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 14: நேற்று இரவு பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள ஜாலான் துன் சம்பந்தனில் உள்ள ஓர் உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார், அவரது இரண்டு நண்பர்கள் காயமடைந்தனர்.
இரவு 10.50 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், 30 முதல் 50 வயதுக்குட்பட்ட மூன்று உள்ளூர் ஆடவர்கள் பல நண்பர்களுடன்
சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும், பின்னர் மோட்டார்
சைக்கிளில் வந்த இரண்டு பேர் அவர்களை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்
பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கு மஷாரிமான் கு மஹ்மூத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களில்
ஒருவர் துப்பாக்கிச் சூடு காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி
செய்யப்பட்டது. மேலும் அவரது
உடல் பிரேத பரிசோதனைக்காக பல்கலைக்கழக மலாயா மருத்துவ மையத்திற்கு (PPUM) அனுப்பப்பட்டது.
பாதிக்கப்பட்ட
இருவர் பிபியுஎம்மில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்,
மற்றொருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று கு மஷாரிமான் சம்பவ இடத்தில்
செய்தியாளர்களிடம் கூறினார்.
இது தொடர்பாக கூடுதல் விசாரணைகள் நடந்து வருவதாக கு மஷாரிமான் கூறினார்!
Seorang lelaki maut dan dua rakannya cedera dalam kejadian tembakan di sebuah restoran di Brickfields, Kuala Lumpur. Dua suspek menaiki motosikal melepaskan tembakan ke arah mangsa. Polis sedang menjalankan siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *