ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு! சுட்டவர் பாதுகாப்பு அதிகாரிகளால் கொல்லப்பட்டார்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பென்சில்வேனியா பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக காது பகுதியில் மட்டும் லேசான காயத்துடன் டிரம்ப் உயிர் தப்பினார். குண்டடிபட்டதும் உடனடியாக சுதாரித்துக் கொண்ட டிரம்ப், தனது முன் இருந்த மைக் மேடையின் கீழே குனிந்து தன்னை தற்காத்துக்கொண்டார். உடனடியாக பாதுகாவலர்கள் அங்கு விரைந்து ட்ரம்பை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து ரத்தம் சொட்ட சொட்ட அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது ட்ரம்பிற்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் பைடனுக்கு எதிராக, ட்ரம்ப் களமிறங்கி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் மீது நடத்தப்பட்டுள்ள இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், முன்னதாக அவர் நடத்திய தாக்குதலில் ட்ரம்பின் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ட்ரம்பின் பரப்புரை நடைபெற்ற பகுதியில் இருந்த ஒரு கட்டடத்தின் மேற்கூரையில் துப்பாக்கியுடன் ஒருவர் நிற்பது குறித்து போலீசாருக்கு தகவல் சொன்னதாகவும், ஆனால் தான் கூறியதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனவும், ட்ரம்ப் ஆதரவாளர் ஒருவர் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது.

ட்ரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பைடன்,ஒபாமா,எலான் மஸ்க் மற்றும் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *