தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடைபெறுகிறது – மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு
- Surendran Sumdraraj
- 14 Jul, 2026
சென்னை, ஜூலை 14-
தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து குதிரை பேரம் நடைபெற்று வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சித் தாவல் மற்றும் குதிரை பேரம் போன்ற அரசியல் நடவடிக்கைகள் தமிழகத்தின் நலனுக்கு ஏற்றவை அல்ல என்று தெரிவித்தார். வடமாநிலங்களில் காணப்பட்ட இந்த அரசியல் கலாச்சாரம் தற்போது தமிழ்நாட்டிலும் பரவி வருவதாகக் கூறிய அவர், இதனைத் தடுக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
குதிரை பேரம் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் பல கட்சி அரசியல் நடைமுறையையும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்றும், மக்களிடையே அரசியல் மீதான வெறுப்புணர்வை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். அரசியல் கட்சிகளும் அவற்றின் உறுப்பினர்களும் தங்களது கொள்கைகளில் உறுதியாக நின்று செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



